3. அரங்கேற்று காதை





30




35

யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்
தேசிகத் திருவின் ஓசை யெல்லாம்
ஆசின் றுணர்ந்த அறிவின னாகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை
வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையொன் றானும

26
உரை
36

                           [இசையாசிரியன் அமைதி]

       
யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு - யாழ்ப்பாடலும் வங்கியப் பாடலும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத் தினையுடைய தண்ணுமையும் கூத்துக்களும் வல்லனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து -- இவற்றுடனே சேரச் செய்த உருக்களை இசை கெள்ளும்படியும் சுவை பொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லனாய், வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - செந்துறை வெண்டுறை என்னும் இருவகைப்பட்ட பாடல்களுக்கும் பொருளான இயக்கம் நான்கினையும் அமைத்து, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து - அழகுடைய தேசாந்தரங்களின் பாடைகளையும் அறிந்து, தேசிகத் திருவின் ஓசை யெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - அந்தப் பாடைகள் இசைபூணும் படியையும் அறிந்து. கவியது குறிப்பும் ஆடற்றொகுதியும் பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை - இயற்புலவன் கருத்தும் நாடகப் புலவன் ஈடுவரவுகளும் அவற்றுக் கடைத்த பாடல்களும் தம்மிற் சந்திப்பிக்கு மிடத்து, வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந் தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனாயுள்ள, அசையா மரபின் இசையோன்தானும் - தளராத இயல்பினையுடைய இசைப்புலவனும் ;