3. அரங்கேற்று காதை

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்

29
உரை
29

        உரிப் பொருள் - இயக்கம் ; பாட்டின் நடை. அது முதனடை, வாரம், கூடை, திரள் என நால்வகைப்படும். அவற்றுள், முதனடை மிகத் தாழ்ந்த செலவினை யுடையது ; வாரம் சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமும் உடையது ; கூடை சொற் செறிவும் இசைச் செறிவும் உடையது ; திரள் மிக முடுகிய நடையினை யுடையது.

       
இசையுடன் படுத்து இயக்கிக் கடைப் பிடித்து உணர்ந்த அறி வினனாகி விரிக்கும் இசையோன் என்க.