3. அரங்கேற்று காதை

45
ஆடல் பாடல் இசையே தமிழே

45
உரை
45

        இசை - நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்பர். இதற்குப் பிரமாணமாக எடுத்துக் காட்டப் பெற்றதோர் சூத்திரம் அடியில் வருமாறு சிதைந்து காணப் படுகின்றது;

       
"உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினும்
       
உடறமி ழியலிசை யேழுடன் பகுத்து
       
மூவேழ் பெய்தந்........................
       
தொண்டு மீண்ட பன்னீ ராயிரங்
       
கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே"

       
தமிழ் என்பதற்கு, வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து கட்டப்பட்ட வாக்கியக் கூறுகள் என்றும் உரைப்பர்.