3. அரங்கேற்று காதை

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை

56
உரை
56

        சித்திரப் புணர்ப்பாவது இசைகொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போலப் பண்ணீர்மை நிறுத்தல். வஞ்சனைப் புணர்ப்பாவது இசைகொள்ளா வெழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற் றுப்போல நெகிழ்த்துப் புணர்த்தல்.