3. அரங்கேற்று காதை

வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு

63
உரை
63

        பட்டடை - அடிமணை; எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின் இளியென்னும் நரம்பு பட்டடை யெனப்பட்டது. யாழின்மேற் பண்களை இளி முறையாலே வைத்து என்க. இளி முறையாவது சட்சக் கிரமம். ஆங்கு, அசை.