வார
நிலத்தைக் கேடின்று பார்த்து என்பது - முதனடை, வாரம், கூடை, திரள் என்று சொல்லப்பட்ட
இயக்கம் நான்கினும் முதல் நடை மிகவும் தாழ்ந்த செலவினை யுடைத்தாகலானும், திரள்
மிக முடுகிய நடையினை யுடைத்தாகலானும் இவை தவிர்ந்து, இடைப்பட்ட வாரப்பாடல் சொல்லொழுக்கமும்
இசையொழுக்கமும் உடைத்தாகலானும், கூடைப்பாடல் சொற்செறிவும் இசைச்செறிவும் உடைத்தாகலானும்
சிறப்பு நோக்கி, அவ்விரண்டினுள்ளும் வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்த வல்லனாய்
என்க. எனவே, கூடைப்பாடலும் அமைவதாயிற்று.
|