மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை - தாரநரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரந்தான் கைக்கிளையாயிற்று; தாரத்திற்குக் கைக்கிளை இடமுறையால் ஐந்தாவதாகலின் கிளை நரம்பென்றார். கிளை - ஐந்தாவது நரம்பு.