3. அரங்கேற்று காதை

80

மேலது உழையிளி கீழது கைக்கிளை
வம்புறு மரபிற் செம்பாலை யாயது

80
உரை
81

        மேலது உழை யிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை ஆயது -- உழைமுதலாகக் கைக்கிளை யிறுதியாக மெலிவு நான்கும் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் புதுமையுற்ற முறையாலே உழை குரலாகச் செம்பாலையாயது;