3. அரங்கேற்று காதை



இறுதி யாதி யாக ஆங்கவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது

82
உரை
83

        இறுதி ஆதியாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது - இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாகவுள்ள கைக்கிளை துத்தம் குரல் என்னுமவை தாம் தோன்றிய இட முறையான இயல்பின் நீங்காது,