இணை
நரம்புடையன அணைவுறக் கொண்டு ஆங்கு - முதலும் இறுதியுமாக வுள்ள நரம்புகளைப் பொருந்தக்
கொண்டு,
இணைநரம்பு
- முதலும் இறுதியுமாகவுள்ள நரம்பு; உழை முதற் கைக்கிளை யிறுதியும், கைக்கிளை முதல்
துத்தம் இறுதியும், இவ்வாறே ஏனையவும் முதலும் இறுதியுமாகி யென்க; இரட்டித்த நரம்பு
என்றலுமாம். உழை, கைக்கிளை, துத்தம், குரல், தாரம், விளரி, இளியென இடமுறையால்
ஒவ்வொன்றும் குரலாகச் செம்பாலை முதலாயின தோன்றினமை அறியற்பாற்று. இவ்வேழு பண்களும்
பிற முறையால் உண்டாவன வேனிற் காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அறியப்படும்.
|