3. அரங்கேற்று காதை

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழன்மேற் கோடி வலமுறை மெலிய

91
உரை
92

        குழல்மேற் கோடி வலமுறை மெலிய - குழலினிடத்துக் கோடிப்பாலை முதலாயின வலமுறை மெலியவும்,

       
குழல்மேற் கோடி என்றதனால் யாழ்மேல் அரும்பாலை யென வருவிக்கப்பட்டது. மெலிதல் - இறங்குதல்; அவரோ கணம்.