நூலோர்
- நாடக நூலோர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இவ்வுலகில் நூல்வழி அரங்கு செய்யுமிடத்துத்
தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கிணறும் குளனும் காவும் முதலாயின அழியாத
இயல்பினையுடைத்தாய், நிறுக் கப்பட்ட குழிப்புழுதி குழிக்கொத்து, கல்லப்பட்ட மண்
இனிய நாற்றமும் இனிய சுவையும் உடையதாய், தானும் திண்ணி தாய், என்பும் உமியும் பரலுஞ்
சேர்ந்த நிலம், களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பற்றரை, பொடித்
தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து, ஊரின் நடுவணதாகி யுள்ள நிலத்திலே தேரோடும்
வீதிகள் எதிர்முகமாகக் கொள்ளப்படும் என்பர்.
நிலம் வன்பால், மென்பால், இடைப்பாலென்று
மூவகைப் படும் ; அவற்றுள் வன்பாலாவது தோண்டப்பட்ட குழியில் அம் மண்ணினைப் பெய்யின்
குழியின்மண் மிகுவது ; மென்பாலாவது குறைவது ; இடைப்பாலாவது ஒத்திருப்பது. இடைப்பாலே
வேண்டப்படுவதாம். மண்ணின் சுவைகளுள் துவர்ப்பு அச்சமும், புளிப்பு நோயும், காழ்ப்புப்
பசிநீடுதலும், கைப்புக் கேடும், உவர்ப்புக் கலக்கமும், தித்திப்பு அன்பும் விளைக்குமாகலின்
தித்திப்பே கொள்ளத் தகுவதாகும்.
|