தலைக்கோல் கொள்ளுமிடத்து மாற்றரசர் குடைக் காம்பும், பகை வேந்தரது எயிற்புறத்து வெட்டின மூங்கிலும், புண்ணிய வரையின் மூங்கிலும் ஆம் என்பர் ; இவற்றுள் முன்னைய இரண்டும் வேத்தியற்கும், பின்னையது பொதுவியற்கு மாம்.