3. அரங்கேற்று காதை



120
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்த னாகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்

118
உரை
120

       மன்னவன் கோயிலில் காப்பமைத்து இருத்திய வென விரித்துரைக்க. ஆகென - ஆக. சயந்தன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாய்ப் பிறந்து தலைக்கோற் றானத்துச் சாபம் நீங்கினா னாகலின் தலைக்கோலைச் சயந்தனாக நினைத்து என்றார்.