தோரிய மகளிராவர் ஆடி முதிர்ந்தவர்,
"இந்நெறி வகையா லிடத்தூண் சேர்வோள்
தொன்னெறி மரபிற் றோரிய மகளே"
எனவும்,
"தலைக்கோ லரிவை குணத்தொடு பொருந்தி
நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
இயற்படு கோதைத் தோரிய மகளே"
எனவும் கூறுவர். தோரிய மகளிரும் என்னும் உம்மையால், தானும் என்பது விரித்துரைக்க.
|