3. அரங்கேற்று காதை

150 நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து

150
உரை
150

       'நாலுறுப்புங் குறைபாடில்லாத' என்னும் இருவருரைக்கும் 'நான்கின் ஒரீஇய' என்னும் மூலம் பொருத்தமாதல் இன்று; ஒருவா, ஒருவில என்றிங்ஙனம் பாடமிருந்திருக்கும் போலும். 'நாலுறுப்பாவன: உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை என்பன. ஈண்டு நாலுறுப்புக்களும் குறைபாடில்லாத உருவென வேண்டியது, மூன்றுறுப்பாலே வருவனவும் உளளாதலின். அவை இரண்டாமடியே ஈற்றடியாகப் பாடி முடிவன. அவை மங்கலத்துக்குப் பொருந்தாவெனக்கொள்க' என்பர்.