4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை


10

கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி
வலம்படு தானை மன்ன ரில்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்



9
உரை
12

       கறை கெழு குடிகள் கைதலை வைப்ப - இறை செலுத் துதற்குப் பொருந்தியுள்ள குடிகள் துயரமுற, அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி - அங்ஙனம் இறை செலுத்தாது கீழறுத்தல் செய்யும் குடிகளை ஒரு தலையாகப் பற்றி, வலம்படு தானை மன்னர் இல்வழி - வெற்றி பொருந்திய சேனையையுடைய வேந்தர் இல்லாத இடமறிந்து, புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் - அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து தங் கிய குறுநில மன்னர்போல,

       கறை - கடமை ; வரி. துயருற என்பதனைக் கைதலை வைப்ப என்பதனாற் குறிப்பிட்டார். விருந்தின் மன்னர் குடிகொன்றிறை கொள்வாராகலின் வரி செலுத்துங் குடிகள் துயருறுவாரென்க. அறை போதல் - கீழறுத்தல் ; உட்பகையாய்ப் பகைவர்க்கு உதவி செய்தல். ஒடு -- ஐ. இல்வழி - இல்லாதவிடம் ; ஈண்டுக் காலத்தை உணர்த்தி நின்றது. குறுநில மன்னரை விருந்தின் மன்னர் என்ற மையால் தானை மன்னர் தொன்றுதொட்டு வருவோர் என்பதா யிற்று.