|
4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
|
25
|
இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்திவா னத்தின் வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பெறிந் தோட்டிப்
பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து
|
|
இளையர்
ஆயினும் பகை அரசு கடியும் - தாம் நனி இளம்பிராயத்தினராயினும் பகையரசரை யோட்டவல்ல,
செருமாண் தென்னர் குல முதல் ஆகலின் - போரில் மாட்சி யுற்ற பாண்டியர் குலத்திற்கு
முதல்வனாகலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி - அந்திப் பொழுதிலே செவ்வானத்தின்
கண் வெள்ளிய பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி - வருத்தத்தைத்
தரும் மாலையாகிய குறும்பினை எறிந்து ஓட்டி, பான்மையில் திரியாது - முறைமையில் வழு வாது,
பாற்கதிர் பரப்பி - தனது பால்போலும் வெள்ளிய ஒளியை விரித்து, மீன் அரசு ஆண்ட -
மீனிராச்சியத்தை ஆண்ட, வெள்ளி விளக்கத்து - வெண்மையையுடைய விளக் கத்திலே.
பாண்டியர் இளையராயினும் பகைவர்க்
கடிதலை 1 இளையதாயினுங் கிளையரா வெறியும்,''2
கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு'' என்னும் புறப்பாட்டுக்களாலறிக. வெண்பிறை
எனப் பண்படுத்தமையால் எடுத்த மொழி இனஞ் செப்பிச் செவ்வானத்து வெண்பிறை தோன்றி
யென்பதாயிற்று. புன்கண் - துன்பம். இடைநின்ற காலத்துப் புகுந்து வருத்துதலின் மாலையைக்
குறும்பு என்றார். பான்மை - முறைமை ; அரசியல். சந்திரன் உடுபதியாகலின் அவன் ஆள்வதனை
மீனரசு என்றார்; மீனரசு என்பதற்குச் சந்திரன் என்று பொருள் கொள்ளின், மீனரசாகிய
பிறை எனக் கூட்டுதல் வேண்டும். விளக்கம் - புகழென்னும் பொருளும் தோன்றும். |
1.
புறம். 58. 2. புறம். 77.
|
|