4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

35

குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கிற் காரகில் துறந்து



35
உரை
36

       குடதிசை மருங்கின் வெள் அயிர் தன்னொடு குண திசை மருங்கிற் கார் அகில் துறந்து - மேற்றிசையிடத் துண் டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத் துண்டான கரிய அகில் முதலியவற்றாற் புகைக்கும் புகையைத் துறந்து,

குடதிசை அயிர் - யவன தேசத்து அயிர் என்பர். அயிர் - கண்டு சருக்கரை ; நறும்புகைக்குரிய பொருள். இவற்றைப் புகைத்தல் மரபாதலை, 1 இருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்ப'' என் பதனாலுமறிக. அகில் - பிறவற்றிற்கும் உபலக்கணம். தட்பத்தை விரும்புங் காலமாதலின் புகையைத் துறத்தல் கூறினார், குடதிசை, குணதிசை ; வெள்ளயிர், காரகில் என்பன முரண் என்னும் அணியாகும்.

1 நெடுநல். 56.