|
4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
|
|
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தன மறுகத்
|
|
வடமலைப்
பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக - வடக்கின் கண்ணதாகிய
இமயமலையில் உண்டான மிக்க ஒளியையுடைய வட்டக் கல்லில் தென் றிசைக் கண்ணதாகிய பொதியின்
மலையிற் பிறந்த சந்தனம் சுழல,
கேழ் - நிறம், ஒளி. வட்டம் - சந்தனம்
உரைக்கும் வட்டக்கல். சந்தனம் - சந்தனக் குறடு. மறுக - சுழல ; அரைக்க வென்றபடி. மறுக
என்றது பூசுதலாகிய காரியந் தோன்றநின்றது.
1
"வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப"
என்பதுங் காண்க. கூதிர்க் காலத்துச்
சந்தனத்தைத் துறந்து புகையை விரும்புதலும், வேனிற் காலத்துப் புகையைத் துறந்து சந்தனத்தை
விரும்புதலும், ஈரிடத்தும் கூறப்பட்டன. மக்கள் வாழ்க்கைக்கு மேற்றிசைப் பொருளும் கீழத்திசைப்
பொருளும் ஒன்று சேர்தலும், வடதிசைப் பொருளும் தென்றிசைப் பொருளும் ஒன்று சேர்தலும்
வேண்டு மென்பது இவற்றாற் பெறப்படுதலின் பல தேயத்தாரும் ஒற்றுமையுடன் வாணிகம் நடாத்துதலின்
இன்றியமையாமை புலனாம். |
1
நெடுநல். 51--2.
|
|