|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
37 |
அரும்பெறன்
மரபிற் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு |
|
பெரும்பாண் - பாணரில் ஒரு பிரிவினர் ; பெரிய இசைகாரர் என்பாருமுளர். பிறர்வினையாளரொடு
பெரும்பாணரும் என்க.
யவனரிருக்கையும், இலங்குநீர் வரைப்பும்,
நகரவீதியும், காருகரிருக்கையும், நனந்தலை மறுகும், கூலவீதியும், காழியர் முதல் ஓசுநர்
ஈறாகச் செறிந்த இருக்கையும், கஞ்சகாரர் முதலாகப் பெரும்பாணர் ஈறாக இருக்குமிடங்களும்
விளங்கும் மருவூர்ப்பாக்கம் எனக. |
|