மூலம்
5. இந்திரவிழவூரெடுத்த காதை
46
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ
டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
46
உரை
47
கொள்கையோடு அணியப்படும் வளை என்க. தமக்குரிய சிறந்த கொள்கையோடு அழகிய சங்கினை யறுப்பார் என்னினும் இழுக்கின்று.