|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
49 |
நாழிகைக்
கணக்கர் நலம்பெறு கண்ணுளர் |
|
நாழிகைக் கணக்கர் - அரசனுக்குச் சென்ற நாழிகையை அறிந்து சொல்லுவார் ; இதனை,
"பூமென் கணையும் பொருசிலையுங்
கைக்கொண்டு
காமன் றிரியுங் கருவூரா--யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோ
யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோ
யொன்று"
என்பதனாலறிக. |
|