|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
10 |
வேயா
மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும் |
|
வேயாமாடம்
முதலியன காண்போர்த் தடுக்கும் யவனரிருக்கை என்க. எகிப்து, கிரீசு முதலிய பிறநாடுகளிலிருந்து
வந்த வாணிகர், தொழிலாளர் முதலாயினார் யவனர் எனப்படுவர் ;
இன்னோரைச் சோனகர் என்றும் மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள். |
|