5. இந்திரவிழவூரெடுத்த காதை

52 பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர

52
உரை
52

        குயிலுவர் - தோற்கருவி துளைக்கருவி நரம்புக் கருவி உருக்குக் கருவியாளர்கள்.

        வீதியும், வீதியும், தெருவும், மறுகும், இருக்கையும், இருக்கையும், வீதியும், இருக்கையும், இருக்கையும் என்னுமிவற்றையுடைய, மல்கிய, சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்க. ஈண்டு ஐம்பத்திரண்டு அடிகளால் இளங்கோவடிகள் கூறியிருக்கும் புகார்நகரின் இயல்புகளோடு 1 மணிமேகலையுள் நாற்பத்து மூன்று அடிகளால் சாத்தனார் கூறியிருக்கும் வஞ்சிநகரின் இயல்புகள்
பெரும்பாலும் ஒத்திருத்தல் அறியற்பாலது.

1. மணிமே, 28 : 29-72