5. இந்திரவிழவூரெடுத்த காதை


60
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபாற் பகுதியி னிடைநில மாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும
நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற்

59
உரை
63

        இருபெரு வேந்தர் முனையிடம் போல - பெருவேந்தர் இருவர் போர் குறித்து வந்து தங்கிய பாசறையிருப்புக்கு இடைநிலமாகிய போர்க்களம்போல , இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய - இரண்டு பக்கத்தினவாகிய மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்னும் இருபகுதிகட்கும் இடைநிலமாகிய, கடைகால் யாத்த மிடைமரச் சோலை - நிரைபட நெருங்கிய சோலைமரங்களின் அடிகளே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய, கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்றி நிலைஇய நாள் அங்காடியில் - பண்டங்களை விற்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் இடையறாது நிலை பெற்ற நாளங்காடியில் ;