|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
64 |
சித்திரைச்
சித்திரைத் திங்கள் சேர்ந்தென |
|
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள் - சித்திரை மாதத்துச் சித்திரைநாளிலே
நிறைமதி சேர்ந்ததாக அந்நாளிலே ;
சித்திரைத் திங்கள் - சித்திரை
மாதம் என்றுமாம். சிறந்தென என்று பாடங்கொண்டு, 'சித்திரை மாதத்துச் சித்திரைநாள்
சிறந்த தென்கையால், சித்திராபூரணை யென்க' என்பர் அரும்பதவுரையாசிரியர்.
அந்நாளிலே 1அவிரொளி கதிர் பரப்ப என்றியைக்க.
1
சிலப். 5: 6,
|
|