|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
65 |
வெற்றிவேன்
மன்னற் குற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமா னேவலிற் போந்த
காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப |
|
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கென - வெற்றிபொருந்திய வேலையுடைய முசுகுந்தன் என்னும்
வேந்தனுக்கு வரும் இடையூற்றை ஒழிப்பாயென, தேவர் கோமான்
ஏவலின் - தேவர்க்கரசனாகிய இந்திரன் ஏவுதலானே, போந்த- அத் தேவருலகினின்றும் போந்து
தங்கி அந்நாள் முதலாகப் பலி கொள்ளுதலையுடைய, காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை - காவலாகிய
பூதத்தின் வாசலிற் பொருந்திய பலிபீடிகையில் ;
உற்றதை - உறுவதை. ஒழிக்கென, விகாரம்.
தேவர் கோமான் ஏவிய வரலாறு, மேல், 1கடலாடு
காதையில் விரித்துரைக்கப்படும். நாளங்காடியிற் போந்து தங்கிப் பலிகொள்ளும் பூதம்
என்க.
காவற்பூதம் - புகாருக்கும் அரசற்கும் காவலாகிய பூதம்.
1
சிலப். 6 : 7-13.
|
|