|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
95
|
அசைவி
லூக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு |
|
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய - (இமய மலை குறுக்கிட்டு விலக்கிற்று ஆதலால்)
மடிதல் இல்லாத மன வெழுச்சியாலே மேலுஞ் செல்ல விரும்பும் என் விருப்பம் பின்னிட்டு
ஒழியும்படி, பகை விலக்கியது இப் பயம் கெழு மலை என - இம் மலை பகையாகக் குறுக்கிட்டுத்
தடுத்தது என முனிந்து. இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை - தேவர்
உறையும் அதன் சிமையத்தின் பிடரில், கொடுவரி ஒற்றி - தனது புலியைப் பொறித்து, கொள்கையிற்
பெயர்வோற்கு - அப்பாற் செல்லும் கொள்கையைக் கைவிட்டு மீள்கின்றவனுக்கு ;
பயங் கெழு மலை - பயன் பொருந்திய
மலையென மலையின் இயற்கை கூறியபடி. இமையமலையிற் றேவர் உறைவ ரென்பது புராணக் கொள்கை.
கரிகாலன் இமையத்தைச் செண்டு என்னும்
படைக்கலத்தால் அடித்துத் திரித்து மீள அதனைப் பண்டுபோல் நிறுத்திப் புலியைப் பொறித்தனன்
என்றும், அச் செண்டு கச்சியிலுள்ள சாத்தன் என்னும் தெய்வத்தால் கரிகாலற்கு அளிக்கப்பட்டதாகும்
என்றும் கூறப்படுதலுமுண்டு. இவற்றை முறையே, 1
"செண்டு கொண்டு கரிகாலனொரு காலிலிமையச் சிமையமால்வரை திரித்தருளிமீள வதனைப்,
பண்டுநின்றபடி நிற்கவிதுவென்று முதுகிற் பாய்புலிப் பொறி
குறித்தது மறித்த பொழுதே" எனவும், "கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி
யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு, கம்பக்களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்,
செம்பொற்
கிரிதிரித்த செண்டு" எனவும் வருவனவற்றால் முறையே அறிக.
1
கலிங்க.
இராசு 1.
|
|