5. இந்திரவிழவூரெடுத்த காதை


100
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும

99
உரை
100

        மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக் கோன் - கடலை அரணாகவுடைய நல்ல வச்சிரநாட்டரசன், இறை கொடுத்த கொற்றப்பந்தரும் - திறையாகக் கொடுத்த முத்தின்பந்தரும்,
வச்சிரநாடு சோணையாற்றங் கரையிலுள்ள தென்ப. கொற்றப் பந்தர் - அவன்றனக்குக் கொற்றத்தான் வந்த பந்தர். இவன் பகையும் நட்புமில்லா அயலான்.