மகத நல் நாட்டு வாள்வாய் வேந்தன்- வாட்போரில் வாய்ப்புடையனாகிய நல்ல மகத நாட்டரசன்,
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் - பகையிடத்துத் தந்த வித்தியா மண்டபமும்,
பகைப்புறம் என்பது விகாரமாயிற்று.
புறம் - இடம். முன் பகையாய்ப் பொருது தோற்றுப் பின் திறையிட்டானென்க. பட்டி மண்டபம்
- வித்தியாமண்டப மாதலை 1 " ஒட்டிய சமயத்
துநுறுபொருள் வாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் 2"
பன்னருங் கலைதெரி பட்டிமண்டபம்" என்பவற்றா லறிக. இதனை ஓலக்க மண்டபம் என்பாருமுளர்.
இவன் பகைவன்.
1மணிமே,
1: 60--1, 2. கம்ப, நகர : 62.
|