5. இந்திரவிழவூரெடுத்த காதை

103 அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும

103
உரை
104

        அவந்திவேந்தன் - அவந்திநாட் டரசன், உவந்தனன் கொடுத்த - மகிழ்ந்து கொடுத்த, நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் - மிகவுயர்ந்த தொழின் முறைமையுடைய வாயிற்
றோரணமும்,

        அவந்தி - உஞ்சை. நிவந்தோங்கு - ஒருபொரு ளிருசொல், இவன் நண்பன்.