5. இந்திரவிழவூரெடுத்த காதை



120
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகின ராடிப்
பழுதில் காட்சி நன்னிறம் பெற்று
வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும

118
உரை
121

        கூனும் குறளும் ஊமும் செவிடும் - கூனரும் குறளரும் ஊமரும் செவிடரும், அழுகு மெய்யாளரும் - தொழு நோயால் அழுகிய உடம்பினை யுடையோரும், முழுகினர் ஆடி -
முழுகி நீராடிய வளவில், பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று - பழுதில்லாத தோற்றத்தையுடைய நல்ல உருவத்தைப்பெற்று, வலம் செயாக் கழியும் - வலஞ்செய்து தொழுது நீங்கும், இலஞ்சி மன்றமும் - பொய்கையையுடைய மன்றமும் ;