தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்-தவ வேடத்தில் மறைந்து நின்று கூடாவொழுக்கத்தில்
ஒழுகும் தவத்தன்மை யில்லாதவரும், அவம் மறைந்து ஒழுகும் அலவற்
பெண்டிர் - மறைந்து தீநெறியில் ஒழுகும் அலவற் பெண்டிரும், அறைபோகு அமைச்சர் - கீழறுக்கும்
அமைச்சரும், பிறர்மனை நயப்போர் - பிறர் மனைவியை விரும்புவோரும், பொய்க்கரியா
ளர் - பொய்ச் சான்று பகர்வோரும், புறங்கூற்றாளர் - புறங் கூறுவாறும் ஆகிய இவர்கள்,
என் கைக்கொள் பாசத்துக் கைப் படுவோர் என - என் கையிற் கொண்ட பாசத்திடத்து
அகப்படு
வோராவர் என்று, காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி - அவ் வூர் நாற்காத வட்டகையும்
கேட்கும்படி தனது கடிய குரலை யெழுப்பி, பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் - பின் அங்
ஙனஞ் செய்வோரைப் பாசத்தாற் கட்டி நிலத்திற் புடைத்து உண்ணும் பூத நிற்கும் பூத
சதுக்கமும் ;
தவவேடம் மறைதற்கே இடமாயிற் றென்பார்
தவ மறைந்து என்றார். தன்மை - தவத்திற்குரிய இயல்பு ; நற்பண்புமாம். ஒழுகும் என்னும்
பெயரெச்சம் இலாளர் என்பதன் விகுதியோடு முடி யும். அவம் ஒழுகுமென்க. அலவல் - அலவலை
யென்பதன் விகா ரம். அலவை யெனப் பாடங் கொள்வாருமுளர். ஆராயாது செய் யும் பெண்டிரென்க.
பாசத்துக் கை - பாசத்திடத்து. பூதம் நிற்ற லாற் பூத சதுக்கமெனப் பெயரெய்திற்று.
சதுக்கம் - நாற்சந்தி்
|