அரைசு கோல் கோடினும் - அரசனது செங்கோல் சிறிது வளைந்ததாயினும், அறம்கூறு அவையத்து
உரை - தரு மாசனத்தார் வழக்குரைக்கும் அவையத்தில் அவர் உரைக்கு முரை, நூல்கோடி ஒரு
திறம்பற்றினும் - நேர்மை திரிந்து ஒரு பக்கம் பற்றினும், நாவொடு நவிலாது - நாவாற்
கூறாமல், நவை நீர் உகுத்துப் பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் - துன்
பக் கண்ணீர் சொரிந்து அழுதலையுடைய பாவை நிற்கும் பாவை மன்றமும் ; (ஆகிய),
நூல் - ஒழுங்கு. ஒரு திறம் பற்றல்
- வாரம் பற்றல். நாவொடு- நாவால். நவைநீர் - குற்றத்துக்காகச் சொரியும் நீருமாம்.
பாவை நிற்றலாற் பாவை மன்றமெனப் பெயரெய்திற்று.
|