மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் - உண் மைத் திறத்தை யுணர்ந்த சீரியோரால்
ஏத்தப்படும், ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ - ஐவகைப்பட்ட மன்றத்திடத் தும் அரிய
பலியையிட்டு ;
அரும்பெறல் மண்டபத்தும், அன்றியும், வெள்ளிடை மன்றம் முதலிய ஐவகை மன்றத்தும் பலியிட்டு
என்க. பீடிகையிற் பலி யூட்ட மண்டபத்தும் மன்றத்தும் பலியிட்டு என்றியையும்.
|