வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் - வச்சிரக் கோட்டத்திலிருக்கும் மங்கல முரசை,
கச்சை யானைப் பிடர்த் தலை ஏற்றி - கச்சையை அணிந்த யானையின் பிடரிடத்தே ஏற்றி,
வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து - மிக்க வெண்மை யுடைய அயிராவதம் நிற்கும்
கோயிலில் சென்று, கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி - விழாவின் தொடக்கமும்
முடிவும் சாற்றி ;
பண்டு தேவர்களின் படைக்கலம்,
ஊர்தி முதலியவற்றுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன வென்க. மணங்கெழு முரசு -
விழா முரசு. கச்சை - கீழ் வயிற்றிற் கச்சை. தலை - இடம். வால் - இளமையுமாம்.
களிற்றரசு - அயிராவதம். கால்கோள் - தொடக்கம் . விழவின் கால்கோளும் கடை நிலையும்
என்க. களிற்றரசிற்குச் சாற்றினர் அஃது இந்திரனைக் கொணர்தற்கு.
1"வச்சிரக்
கோட்டத்து மணமுழா வாங்கிக்
கச்சை யானைப்
பிடர்த்தலை யேற்றி"
என்றார் மணிமேகலையுள்ளும்.
1 மணி.
1 ; 27--8.
|