தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து - பூமியிற் றங்கிய முறையையுடைய கற்பகம்
நிற்குங் கோயின் முன்னர் மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து - அட்டமங்கலத்தோடு
நெடிய கொடியை வானிலே செல்ல எடுத்து ;
இந்திரன் தனது நிழலிற் றங்கிய
செருக்கை யுடைய தரு வென்றுமாம். தரு - கற்பகத் தரு. கொடி - அயிராவதம் எழுதிய கொடி.
|