5. இந்திரவிழவூரெடுத்த காதை




150




155
மரகத மணியொடு வயிரங் குயிற்றிப்
பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத் தியாங்கணுங்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரண நிலைஇய தோமறு பசும்பொற்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொற் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியிற் செறிந்தாங்கு

147
உரை
156

        மரகதமணியொடு வயிரம் குயிற்றி - மரகதம் வயி ரம் என்னுமிவற்றை விளிம்பிலே ஆயப் பலகையாகப் படுத்து, பவளத் திரள் கால் - அதன்மீதே செம்பவளத் தூண்களை நிரைத்த, பைம்பொன் வேதிகை - பசும்பொன்னா லாகிய திண்ணைகளையுடைய, நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங் கணும் - நெடிய நிலைகளையுடைய மாளிகைகளின் வாயிலிடம் தோறும், கிம்புரி - கிம்புரி செறித்த கொம்பினையும், பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து - அங்காந்த வாயாற் கான்ற பருமுத் தொழுங்கினையுமுடைய, மங்கலம் பொறித்த - அட்டமங்கலங் களையும் பொறித்த, மகரவாசிகைத் தோரணம் - வாசிகை வளை வாக வளையச் செய்த மகர தோரணங்கள், நிலைஇய - நிலை பெற்ற, தோம்அறு பசும்பொற் பூரண கும்பத்து - குற்றமற்ற பசிய பொன்னாற் செய்த நிறை குடமும், பொலிந்த பாலிகை - பொலிவுபெற்ற முளைப்பாலிகையும், பாவை விளக்கு - பாவை விளக்கும், பசும்பொற் படாகை - பசும் பொன்னாலாய கொடி யும், தூமயிர்க் கவரி - வெள்ளிய மயிரையுடைய சாமரையும், சுந்தரச் சுண்ணத்து - அழகிய பொற்சுண்ணத்துடனே, மேவிய கொள்கை வீதியில் - பொருந்திய இயல்பினையுடைய வீதியிலே, செறிந்து ஆங்கு - நெருங்கி.

        குயிற்றிய என்னும் பாடத்திற்கு வயிரங் குயிற்றிய காலை யுடைய வேதிகை என்க. கிம்புரி - கொம்பிலணியும் பூண். வாசிகை - வளைத்த மாலை; திருவாசியுமாம். கிம்புரியையும் முத்தொழுக்கத்தையு முடைய மகர தோரணம் நிலைபெற்ற வீதியெனவும், பூரண கும் பம் முதலியன மேவிய வீதி யெனவும் தனித்தனி கூட்டுக. கிம்புரிப் பகுவாய் - மகரவாய் என்பது அரும்பதவுரை. பாவை விளக்கு - பாவை நின்று ஏந்திய விளக்கு. பாலிகை, பாவை விளக்கு என்ப வற்றோடும் பசும்பொன் என்பதனைக் கூட்டுக. படாகை - கொடி. ஆங்கு , அசை.