5. இந்திரவிழவூரெடுத்த காதை




160
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி

157
உரை
160

        ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் -, அரச கும ரரும் பரத குமரரும் - அரச குமரரும் வணிக குமரரும், கவர் பரிப் புரவியர் - பகுத்து விரையும் குதிரையினராய், களிற்றின்
தொகுதியர் - யானையின் திரட்சியினராய், இவர் பரித் தேரினர்- மேலே பாயும் குதிரை பூட்டிய தேரினராய், இயைந்து ஒருங்கு ஈண்டி - தம்மிற் பொருந்தி ஒன்றுபடத் திரண்டு;

        ஐம்பெருங் குழுவாவன: "அமைச்சர் புரோகிதர் சேனாபதி யர், தவாத்தொழிற் றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே" எனுமிவர். இவ் வைந்து கூட்
டமே பஞ்சாயம் எனப்படும். எண்பேராயமாவன : "கரணத்திய லவர் கருமகாரர், கனகச் சுற்றங் கடைகாப் பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப" எனுமிவர். இனி,

        "சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுகநெய், ஆய்ந்த விவ ரெண்ம ராயத்தோர் - வேந்தர்க்கு, மாசனம்பார்ப் பார்மருத்தர் வாழ்நிமித்த ரோடமைச்சர், ஆசி லவைக்களத்தா ரைந்து" எனக் காட்டுவர் அரும்பதவுரை யாசிரியர். இவர்தல் - தேரைக்கொண் டெழுதல். குழுவும் ஆயமும் வீதியிற் செறிந்து, குமரரும் குமரரும் ஈண்டி என்றியைக்க. பரதர் - வணிகர். புரவியர் களிற்றினர்
தேரினரான அரசகுமரரும் என்றியைத்தலுமாம்.