நால்வகைத் தேவரும் - நால்வகைப்பட்ட தேவரும், மூவறு கணங்களும் - பதினெண் வகைப்பட்ட
கணங் களும் என, பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து - வேற்றுமை தெரிந்து வகுக்கப்பட்ட
இனமாகிய தோற்றத்தை யுடைய, வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் - வெவ்வேறு கடவுளரது
விழா ஒரு பக்கம் சிறக்க :
நால்வகைத் தேவராவார்: வசுக்கள்
எண்மரும். ஆதித்தர் பன் னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும்
என நால்வகைப்பட்ட முப்பத்து மூவர். மூவறு கணங்களாவார்: தேவர், அசுரர், முனிவர்,
கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர்; இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர்,
வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போக பூமியோர்
என்னு மிவர்; பிறவாறு முரைப்பர்.
|