அறவோர் பள்ளியும் - அருகர் புத்தர்
பள்ளிகளிலும், அறன் ஓம்படையும் - அறத்தினைப் புரக்கும் சாலைகளி லும், புறநிலைக்
கோட்டத்துப் புண்ணியத் தானமும் - மதிற் புறத்தேயுள்ள புண்ணியத் தானங்களிலும், திறவோர்
உரைக் கும் செயல் சிறந்து ஒருபால் - அறத்தின் கூறுபாடுகளை யுணர்ந் தோர் தருமம் போதிக்கும்
செயல் ஒருபக்கம் சிறக்க ;
ஓம்படை
- பாதுகாவல் ; ஈண்டு அவ்விடத்தை யுணர்த்திற்று. கோட்டம் - ஈண்டு மதில். புண்ணியத்தானம்
- பொதியின் முதலாயின. மணிமேகலையுள், 1
"நுதல்விழி நாட்டத் திறையோன்
முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக, வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை,
ஆறறி மரபி னறிந்தோர் செய்யுமின், தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும், புண்ணிய
நல்லுரை
யறிவீர் பொருந்துமின்" என வருதல் ஈண்டு அறியற்பாலது.
1 மணிமே,
1 : 54--9.
|