கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
- கொடியணிந்த தேரையுடைய அரசனோடு பகையாய்ச் சிறைப்படுத்தப் பட்ட மன்னர்களின்,
அடித்தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் - அடியிற் பிணித்த தளையை நீக்கிச் சிறைவீடு
செய்தற்கு ஒரு பக்கம் அருள் சிறக்க ;
வேந்தனொடு என்பதில் ஒடு அசையுமாம்.
|