5. இந்திரவிழவூரெடுத்த காதை


185
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரொடு
எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால

184
உரை
186

        கண்ணுளாளர் - கூத்தரும், கருவிக் குயிலுவர் - குயிலுவக் கருவியாளரும், பண்யாழ்ப் புலவர் - பண்ணப்பட்ட யாழ்வாசிக்கவல்ல புலவரும், பாடற் பாணரொடு - கண்டத்தாற் பாடும் பாணரும் என்னும் இவர்களுடைய, எண் அருஞ் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் - அளந்தறிதற்கரிய சிறப்பினையுடைய இசைகள் ஒருபக்கம் சிறக்க ;

       
கருவிக் குயிலுவர் - குழலரும், தோற்கருவியாளரும் ஆம்.