5. இந்திரவிழவூரெடுத்த காதை

187 முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலு ளாங்கண்

187
உரை
188

        முழவுக்கண் துயிலாது - கங்குலும் பகலும் இங்ஙனம் நடத்தலால் முழவின் கண்கள் அடங்குதலின்றி, முடுக்க ரும் வீதியும் - குறுந்தெருக்களும் பெருவீதிகளும், விழவுக்களி சிறந்த - விழவாற் களிப்புமிக்க, வியலுள் ஆங்கண் - அகன்ற ஊரிடத்து ;

       
ஓமமும், சாறும், செயலும், அருளும், இசையும் ஒவ்வொருபாற் சிறக்க, நீராட்டக் களிசிறந்த ஊர் என்க.