கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து
ஆங்கு - கரிய மேகத்தைச் சுமந்து சிறிய முயற்கறையை யொழித்து, இரு கருங்கயலோடு இடைக்
குமிழ் எழுதி - இருமருங்கினும் இரண்டு கரிய கயலினையும் இடையே ஒரு குமிழ மலரையும் எழுதி,
அங்கண்வானத்து அரவுப்பகை அஞ்சி - அழகிய வானத் திடத்தே அரவாகிய பகை செறுமென்று
அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டு கொல் - திங்களும் இந்நிலத்தே இங்ஙனம்
உள்வரிக் கோலங்கொண்டு திரிகின்றது கொல்லோ எனவும்,
திங்கள் அரவுப் பகை யஞ்சிச் சுமந்து ஒழித்து எழுதி ஈண்டுத் திரிதலுண்டோ என்க. ஆங்கு,
அசை. திங்களும் என்னும் உம்மை சிறப்பு. திரிதலும் என்பதில் எச்சம் ; அசையுமாம்.
குறுமுய லொழித்த திங்கள் முகமும், கருமுகில் கூந்தலும், இரு கருங் கயல் கண்களும், குமிழ்
மூக்குமாம். இதன்கண், அற்புத வுவமை, தற்குறிப்பேற்ற வுவமை, ஐயவுவமை என்னும் அணிகள்
அமைந்து இன்பம் விளைக்கின்றன. பின்வருவனவற்றிலும் இன்ன அணிகள் பொருந்தியுள்ளமை
காண்க.
|