இருநில மன்னற்குப் பெருவளம் காட்ட
- பெரிய நிலத்தினையுடைய அரசற்குத் தனது பெரிய வளத்தினைக் காட்ட வேண்டி, திருமகள்
புகுந்தது இச் செழும்பதி ஆம் என - இலக்
குமி வந்து புகுந்திருப்பது இந்தச் செழுமையுடைய நகராகு மெனக் கருதி, எரிநிறத்து இலவமும்
முல்லையும் அன்றியும் - எரிபோலும் நிறத்தையுடையதோர் இலவ மலரும் பல முல்லை
யரும்புகளும் அன்றியும், கருநெடுங் குவளையும் குமிழும் பூத்து - இரண்டு பெரிய நீலோற்பல
மலரும் ஒரு குமிழ மலரும் ஆகிய இவற்றைப் பூத்து, ஆங்கு - பூத்த அப்பொழுதே, உள்வரிக்
கோலத்து உறுதுணை தேடி - உள்வரிக் கோலத்தோடு தனக்குப் பொருந்திய துணையாகிய திருமகளைத்
தேடி, கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல் - கள்ளத்தையுடைய தாமரை திரிதலும் உண்டாயிற்றோ
எனவும்,
திருமகள்
புகுந்தது இச் செழும்பதி என்றிருப்பினும், பதிக்கண் புகுந்துளாள் என்பது கருத்தாகக்
கொள்க. தனது வளம் - தன்னா லாகும் வளம்; செல்வமும் அழகும். இலவம் வாயும், முல்லை
பல் லும், குவளை கண்ணும், குமிழ் மூக்கும், கமலம் முகமும் ஆம். நீர்ப் பூவாகிய கமலம்
கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ ஆகியவற்றைத் தன்னகத்தே பூத்த தென்றார். உள்வரிக்
கோலம் - கிருத்திரிம வேடம் ; பொய்யுரு. என்றும் தன்னகத் திருப்பாளாகலின் திருமகளைத்
தாமரைக்குத் துணை யென்றார். கள்ளக் கமலம் - கள்ளையுடைய அக் கமலம் என்பது இயல்பாய
பொருள். தாமரை மலரே இலவம் முதலியவற்றைப் பூத்துக் கொண்டு உருத்திரிந்து முகம் என்ற
பெயருடன் திரியா நிற்கின்றது என அற்புதம் தோன்றக் கூறினார். ஆங்கு, அசையுமாம்.
|