மன்னவன் செங்கோல் மறுத்தல்
அஞ்சி - அரசனது செங்கோலை மறுத்ததாகுமென்றஞ்சி, பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
- பல வுயிரையும் பருகும் திறந்த வாயையுடைய கூற்றம், ஆண்மையில் திரிந்து - ஆணியல்பு
திரிந்து, அருந்தொழில் திரியாது - தனது கொலைத் தொழிலின் வேறு படாது, நாண் உடைக்
கோலத்து நகைமுகம் கோட்டி - நாணி னையுடைய கோலத்தையும் நகை பொருந்திய முகத்தையும்
உண்டாக்கிக் கொண்டு, பண்மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி - திவவினையுடைய
யாழின் நரம்புபோலப் பண்ணாகிய மொழியைப் பேசி, பெண்மையில் திரியும் பெற்றியும்
உண்டு என - பெண்ணுருவோடு இங்கே திரியுந் தன்மையும் உண்டா யிற்றோ எனவும்,
கூற்றம்
ஆணுருவோடு திரிந்து உயிர் பருகில் செங்கோலை மறுத்ததாகு மென்றஞ்சி ஆணுரு வொழிந்து
பெண்ணுருவோடு தொழில் வேறுபடாது திரியும் பெற்றி யென்க. ஆண்மை - கடுத்த முகமும் இடித்த
குரலும் முதலியவற்றோடு கூடிய ஆண் வடிவு. கோட்டி - வளைத்து என்றுமாம் ' . திவவு - யாழின்
கோட்டிலுள்ள நரம்புக் கட்டு. யாழ் நரம்பின் மொழி மிழற்றி என மாறுக. பெண்மை -
நாணுடைக் கோலமும் நகைமுகமும் பண்மொழி மிழற்றலுமுடைய பெண் வடிவு. உண்டுகொல் என இடைச்சொல்
விரித்துரைக்க. கூற்றமே பெண்ணுருக் கொண்டு திரிந்த தென்றார்.
1"பண்டறியேன்
கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற்
பேரமர்க் கட்டு"
என்பது காண்க.
1 குறள்,
109 : 3.
|