|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
24 |
காழியர்
கூவியர் கண்ணொடை யாட்டியர் |
|
காழியர் - பிட்டுவாணிகர். கூவியர் - அப்ப வாணிகர் ; கடலாடு காதையுள், 1
"காழியர் மோதகத் தூழுறு விளக்கமும், கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும்" எனக் கூறுதல்
காண்க. காழியர் - வண்ணார் என்பாருமுளர். நொடை - விலை.
1 சிலப்.
6 : 137-8.
|
|