|
5
|
தென்றிசை மருங்கினோர் செழும்பதி
தன்னுள்
இந்திர விழவுகொண்டு எடுக்குநாள் இதுவெனக்
|
|
தென்றிசை
மருங்கின் ஓர் செழும்பதி தன்னுள் - தென்றிசைப் பக்கத்து ஓர் வளவிய நகரிடத்து, இந்திர
விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என - இந்திர விழாவிற்குக் கால் கொண்டு செய்யும்
நாள் இதுவெனக் கூறி,
செழும்பதி - காவிரிப்பூம் பட்டினம்.
இதற்கு அடியார்க்கு நல்லார் வலிந்துரைக்கும் பொருள் மெய்யெனத் தெளியற்பாலதன்றாயினும்,
அவர் கருத்தினை அறிந்துகோடல் கருதி, ஈண்டுக் காட்டப்படும்.
[அடி: வீரன் பங்குனித்திங்கள்
இருபத்தொன்பதிற் சித்திரை நாளிலே அவ் விழா முடிதலின்,......கொடி யெடுக்கு நாள்
மேலை மாதத்து இந்தச் சித்திரை காணெனச் சொல்லி யென்க. இதுவெனச் சுட்டினான் ; அன்றும்
சித்திரை யாகலின். ஈண்டுத் திங்களும் திதியுங் கூறியது என்னை யெனின், கோவலனும் மனைவியும்
ஊரினின்றும் போந்த திங்களும் திதியும் வாரமும் நாளும் வழிச் செலவும் ஒழிவும், மதுரையிற்
சென்று புக்கு அவன் இறந்துபட்ட திங்கள் முதலாயுள்ளவற்றோடு மாறு கொள்ளாது முடிதற்கெனக்
கொள்க. அது யாண்டுமோ வெனின், வேனிற் காதையினும் நாடுகாண் காதையினும் காடுகாண் காதை
கட்டுரை காதை யென்னும் இவற்றுள்ளுமெனக் கொள்க.] |
|